Tamil Ondrium IJmond
யாப்பு
1. அங்கத்துவ பணம் செலுத்தி அனைவரும் அங்கத்தவர் ஆதல் வேண்டும்.
2.ஒரு குடும்பத்தில் ஒருவர் அங்கத்தவரானல் குடும்பஅங்கத்தவர்கள் அனைவரும் அங்கத்தவர்களாக கருதப்படுவர்.
3.பொதுச சபைக்கு யாவரும் சமுகமளிக்கலாம் ஆனால்அங்கத்தவர் அல்லாதோர் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கலாம்.
4.அங்கத்தவர்கள் பொதுச் சபைக்கோ அல்லது நிர்வாகிகள் நிர்வாகசபைக்கோ சமூகமளிக்காவிடில் தலைவருக்கோஅல்லது செயலாளருக்கோ அறிவிக்க வேண்டும். அறிவிக்காத பட்சத்தில் சபையில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் பற்றி எவ்விதமான ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது.
5.ஓன்றியம் நாடாத்தும் விளையாட்டு போட்டிகளில் அங்கத்தவர்கள் மட்டுமே பங்கு பற்ற முடியும்.
6.பொதுச்சபைக்கு ஆகக்குறைந்தது 20 அங்கத்தவர்கள் சமுகமளித்திருத்தல் வேண்டும்.
7.வேறு அமைப்புகளில் முக்கியமான பொறுப்புகளில் இருப்போர் ஓன்றியத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களாக முடியாது.
8.தெரிவு செய்யப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தின் பதவிக்காலம் 3 தடைவைகளாக மட்டுப்படுத்தபட்டுள்ளது.
8.1வருடாந்தாம் பொதுச்சபையில் நிர்வாகசபை தெரிவு செய்யப்படல் வேண்டும்.
8.2தேவையேற்படின் நிர்வாகசபையினரால் பொதுச்சபை ஒழுங்கமைக்கபடும்.
8.3அங்கத்தவர்களுக்கு பொதுச்சபை ஒழுங்கமைக்கபட வேண்டியிருந்தால் 15 அங்கத்தவர்களின் எழுத்து முறையிலான கோரிக்கை முன் வைக்கப்பட்டால் பொதுச்சபை ஒழுங்கமைக்கபடும்.
9.நிர்வாகத்தின் மேல் நம்பிக்கை இல்லையெனில் அங்கத்தினர் 20 பேரின் எழுத்து முறையிலான நம்பிக்கையில்லா தீர்மான அடிப்படையில் பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடாத்தபடல் வேண்டும்.
10.முக்கியமான முடிவுகளில் அங்கத்தவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்படின் இரகசிய வாக்கெடுப்பு முறையில் முடிவுகள் எடுக்கபடும்.
11.தனியான அங்கத்தவர்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துக்களே நடைமுறை படுத்தபடல் வேண்டும்.
12.அங்கத்தவர்களின் குடும்பங்களில் துயரமான நிகழ்வுகள் ஏற்பட்டால் ஒன்றியமானது 2 மாத காலத்திற்கு களியாட்ட மற்றும் அவசியமற்ற நிகழ்வுகளை தவிர்த்து கொள்ளுதல் வேண்டும்.
12.1 அங்கத்தவர் ஐமொன்ட் நகர எல்லைக்குள் வாழ்ந்தால் மட்டுமே இவ்விதி பொருந்தும்.
13.மேற்கண்ட விதி முறைகளில் மாற்றம்செய்யப்பட வேண்டியிருப்பின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கத்தவர்களின் அனுமதியை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெறப்பட வேண்டும்.
14. நிர்வாகத்தில் இருப்பவர்கள் கைகலப்பு ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்கள் உடனே நிர்வாகத்தில் இருந்து நீக்கபடல் வேண்டும்.
14.1 நீக்கப்பட்டவர்க்கு பதிலாக புதிதாக ஒரவர் உடன் தெரிவு செய்யப்படல் வேண்டும்
15. அங்கத்தவர்களாக இருபவர்கள் கைகலப்பு ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்கள் இரண்டு பொதுசபை அமர்விற்கு சமூகமளிக்கக் கூடாது .3வது பொதுசபை அமர்விற்கு சமூகமளிக்கலாம் அனால் பேச்சுரிமை வழங்கப்படமாட்டது.
16. அங்கத்தவர் ஒருவர் தமிழர் ஒன்றியாத்திற்கு எதிராக செயல்பட்டால் அவர்களை ஒன்றிய அங்கத்தவர் பட்டியலில் இருந்து நீக்கப்படல் வேண்டும்.